கோவில்பட்டியில் மாநில வினாடி- வினா போட்டி; மதுரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது. 9-வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் தலைமை தாங்கி பேசினார். இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார்.
காலை 11.30 மணியளவில் நடத்தப்பட்ட தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன் முனைவர்.எம்.ஏ.நீலகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் ,மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் பரிசு வழங்கினர். கணிதத் துறை உதவி பேராசிரியை முனைவர் எஸ்.கீதா வரவேற்று பேசினார்.


மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பஸ் பள்ளி மாணவர்கள் எம்.முத்து சிவகாதிர் மற்றும் ஜி.அஸ்வின் சிவா முதல்பரிசு ரூபாய் 25 ஆயிரம், திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா , வீ.பி.ஹரினி இரண்டாம் பரிசு ரூபாய் 15,000 ஆயிரம், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பி பொன்செல்வ ஜெயந்த், எப் ஜாய்சன் ராஜா ஆகியோர் மூன்றாம் பரிசு ரூபாய் 10,000 பெற்றனர்.
மேலும் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கே.கார்த்திகேயன்,என்.ஹரிசுப்ரமணியன், மதுரை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் எம்.மாத்திஸ் பிரபு,ஆர்.ஹரிசரன், பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் இங்கிலிஷ் பள்ளியின் ஏ.ஸ்ரீநிதி, ஜி.எஸ்.அமோஹா ,திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர கோல்டன் ஜூபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எஸ்.மதுவர்ஷினி, ஒய்.ஸ்ரீவத்சன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவிலயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் எம்.ஆர்.கார்த்திக் பாண்டியன், எல்.ஹரிநாத், சாத்தூர் கே.சி.ஏ.டி.சிதம்பர நாடார் மேல்நிலைப்பள்ளியின் கே.மோனிகா, எஸ். தர்ஷினி, திருநெல்வேலி ஐ.ஐ.பி.இ.லக்ஷ்மிராமன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் வி.இலக்கிய ப்ரியா, கே.இன்டெஸ் ராம், தூத்துக்குடி ஸ்பீக் நகர் மேல்நிலைப் பள்ளியின் ஜி.ஜெய்சுகன், எம்.செல்வப்பிரியா. மதுரை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியின்(சி.பி.எஸ்.இ) கே.சஞ்சய் ஸ்ரீநிவாஸ்,டி.சாய் சந்தோஷ், குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆர்.கணபதி சுந்தர், எம்.திலீபன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர் முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர்.எஸ்.சித்திரைக்குமார், எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், முனைவர் எம்.அரவிந்த், முனைவர் எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
