• June 7, 2025

கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

 கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் , வி..கெங்குசாமி நாயுடு 93 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் – கோவில்பட்டி மண்டலம் சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானமுகாம் நடைபெற்றது,  

 அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் ரத்த தானம் கொடுக்கப்பட்டது. உப தலைவா் எல்.பி.எல்.ஜெகன் , இணை செயலாளா் அப்பனேரி வி.கற்பூராஜ் , மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெகன் மோகன் , அப்பனேரி கிளை இ..ரகு குமாா் உள்பட ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் , செயலாளா் சி.வேல்ராஜ் , பொருளாளா் பி..கோபாலகிருஷ்ணன் , உப தலைவா் எஸ்.குமாா் , மாநில பிரதிநிதி டி.வெங்கடேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *