சமத்துவ மக்கள் கட்சி 17ம் ஆண்டு தொடக்க விழா; கோவில்பட்டியில் பெண்களுக்கு இலவச குடங்கள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டி யில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் பெண்களுக்கு இலவச குடம் வழங்கப்பட்டது.
விழாவில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை, ஏழாவது வார்டு 0செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
