• October 26, 2026

கோவில்பட்டி மக்கள் பார்வைக்காக `வந்தே பாரத் ரெயில்’ ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுகிறது

 கோவில்பட்டி மக்கள் பார்வைக்காக `வந்தே பாரத் ரெயில்’ ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுகிறது

தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு  வந்தே பாரத் ரெயில் நாளை மறுநாள்  24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

.அன்றைய தினம் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் 7.15க்கு விருதுநகர், 7.50 க்கு மதுரை, 8.40க்கு திண்டுக்கல், 9.55க்கு திருச்சி, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

அதேபோல, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45க்கு திருச்சி, இரவு 7.55க்கு திண்டுக்கல். 8.45க்கு மதுரை, 9.15 க்கு விருதுநகர், இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் வகையில் கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரை கோட்டத்தில்  அதிக வருமானம் தரும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்காது. இதனால் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவையை 24 ந் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். அன்றைய தினம்  திருநெல்வேலியில் இருந்து பகல் 12.30 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கொடியசைத்து தொடக்கி வைக்கப்படும்.

வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி மக்கள் பார்க்க வசதியாக 24-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம்  நிறுத்தப்படும். அப்போது கோவில்பட்டி மக்கள் ரெயிலை பார்க்கலாம்.

மேலும் ஏற்கனவே ரெயில் நிற்கும்  இடங்களை தவிர்த்து  அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மறைமலை நகர், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *