• June 9, 2025

கோவில்பட்டியில் விநாயகர், முருகர் வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம்

 கோவில்பட்டியில் விநாயகர், முருகர் வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம்

கோவில்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  புதுக்கிராமம் சக்தி விநாயகர், அதிகாலை விநாயகருக்கு மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து  சிறுவர், சிறுமியர்கள் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வண்ணம், விநாயகர் முருகர், பாரத மாதா, போன்று வேடம் அனைத்தும் பக்தர்கள் பால் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்தும், பெண்கள், குழந்தைகள் கைகளில் மாவிளக்கு எடுத்தும் இசை முழங்க வான வேடிக்கையுடன் ரெயில் நிலையத்திலிருந்து புதுக்கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். 

இதனைத் தொடர்ந்து சக்தி விநாயகர் மூலவருக்கும் உற்சவருக்கும் 21 வகையான சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாரானையும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி ராஜூ நகர் இபி காலனி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி இ.பி. காலனி கும்மி பாட்டு குழுவினரால் பல்வேறு கும்மி பாட்டு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறுவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது சிவ பக்தர்களின் விநாயகர் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

#vinayagar chaturthi#vinayagar songs#tamil vinayagar songs#vinayagar#vinayagar tamil songs#vinayagar chaturthi recipes # vinayagar chaturthi pooja in tamil#vinayagar chathurthi recipes#vinayagar chaturthi vazhipadu

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *