தேசிய அளவிலான ஆக்கி: குருமலை ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணி `சாம்பியன்’
அகில பாரத வித்யா பாரதி சார்பில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே பெண்களுக்கான ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பெண்கள் ஆக்கி அணி பங்கேற்றது.
லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் உத்தர பிரதேச மாநில அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் இறுதிச்சுற்றில் ராஜஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பெண்கள் ஆக்கி அணி வெற்றி பெற்றது.
சாம்பியன் பட்டத்துடன் வெற்றி கோப்பை பரிசு பெற்ற ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பெண்கள் ஆக்கி அணியினர் மற்றும் அணியின் பயிற்சியாளர் ஆகியோர் நேற்று இரவு கோவில்பட்டி திரும்பினார்கள். ரெயில் நிலையத்தில் . அவர்களுக்கு பா.ஜ.க. விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் வேல்ராஜா, நகரத் தலைவர் சீனிவாசன், நகரமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்







