கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டம முன்னாள் ஆளுநர் முனைவர் ஷேக் சலீம்,கிளப் சர்வீஸ் அவன்யூ சேர்மன் ஆறுமுகச்செல்வன், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோர் ரோட்டரி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், வி.எஸ் பாபு, ஆசியா பார்ம்ஸ் பாபு மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







