தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, இதையொட்டி கோவில்பட்டி புது ரோடு முத்தையாமல் தெரு சந்திப்பில் சங்கரலிங்கனார் உருவப் படத்திற்கு நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் பாலமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முருகேசபாண்டியன், கண்ணன், ரத்தினவேல்,சேகர், அரசுராஜ்,முத்துசாமி, காந்தாரி,மதிமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
