கோவில்பட்டியில் ஒரு பிரமாண்டம்: பத்மலீலா கல்யாண மஹால் திறப்பு
கோவில்பட்டியில் ஒரு பிரமாண்டமாக பத்மலீலா கல்யாண மஹால் உருவாகி உள்ளது. இளையரசனேந்தல் சாலையில் கம்பீர தோற்றத்தில் காட்சி அளிக்கும் இந்த கல்யாண மகாலில் மேரேஜ் ஹால் மற்றும் டைனிங் ஹால் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டுள்ளது.
750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மேரேஜ் ஹால், 250 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் டைனிங் ஹால், ஒரே நேரத்தில் 16 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு லிப்ட்கள், 21 நபர்கள் தங்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட பர்னிச்சர்களுடன் கூடிய 7 எக்சிகியூட்டிவ் ஏர்கண்டிஷன் அறைகள், பியூட்டி பார்லர் அமைப்பில் உருவாக்கப்பட்ட மணமகள் ஏர்கண்டிஷன் அறை போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் நவீன ஒலி அமைப்புகளுடன் இரண்டு DJ மியூசிக் சிஸ்டம் உண்டு. திருமண மண்டபத்தில் உள்ள பிரத்யேக UNILUMIN LED சுவர்களில் மேடை நிகழ்ச்சியை காண முடியும். டைனிங் ஹாலில் 4 K UHD காட்சியுடன் சவுண்ட் பாக்ஸ்கள் உண்டு,
எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் எடுக்கும் பகுதி தனியாக இடம் பெற்றுள்ளது,. மண்டபத்தை சுற்றிலும் சுற்றிலும் வடிவமைக்கப்பட்ட கார் பார்க்கிங் வசதி, தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகளை சமைப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்ட சமையலறை
மண்டபத்தின் இரண்டாவது மாடியில் பிரத்யேக கூரை தோட்டம் விருந்து மண்டபம் அமைந்துள்ளது. இழுவை துணியால் மூடப்பட்டிருக்கும் இந்த மண்டபத்தில் 200 பேர் வரை இருக்கலாம்.


கோவில்பட்டியில் இதுவரை இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்கள் கொண்ட கல்யாண மஹால் இருக்க முடியாது என்று சொல்லும் வகையில் கல்யாண மண்டபத்தை பிரமாண்டமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இத்தனை சிறப்புகள் கொண்ட பத்மலீலா கல்யாண மஹால் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார். சீனிவாசா மருத்துவமனை டாக்டர் என்.டி.சீனிவாசன் முன்னிலை வகித்தார். சென்னை எஸ்.பி.எல்.இன்ப்ரா ஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எஸ்.பி.லெட்சுமணன், கல்யாண மஹாலை திறந்து வைத்தார்.
கல்யாண மஹால் திறப்பு விழாவில் தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களை கல்யாண மஹால் உரிமையாளர் குடும்பத்தினர் எஸ்.என்.அய்யலுசாமி, மகன் ஏ.சரவணன், மருமகள் எஸ்.பத்மா, பேரன்கள் எஸ்.ஹரிவிசால், ஹரிவிஸ்வாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
விழா தொடக்கத்தில் சென்னை ரங்கமந்திரா அகாடமி இயக்குனர் நடன கலைஞர் டாக்டர் சுவர்ணமால்யா வரவேற்று பேசினார்.
பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதன, ரங்கமந்திரா அகாடமியின் பாரம்பரிய சதிர் நடனம் (பரதநாட்டியம்) நடந்தது. பாலக்கோடு பொன்னன்`ஸ் ப்ளு குழுவினரின் சிங்காரி(செண்டை)மேளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கல்யாண மஹால் திறப்பு விழாவை தொடர்ந்து 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் பகல் 12 மணிக்குள் பத்மாவதி தாயாருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை ஸ்ரீ அலங்கார சேவாமணி ஸ்ரீ ராமானுஜதாஸர் நடத்தி வைக்கிறார்.








