திட்டங்குளம், முத்துநகர், பல்லக்குரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜூனை தொடர்ந்து இந்த மாதமும் மின் கணக்கீடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கோவில்பட்டி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி நகர் உப கோட்டம் கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகாளான தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி ரோடு, சாய் சிட்டி, முத்துநகர் பகுதிகள் ,பல்லக்கு ரோடு, ரீஜெண்டு ஜவுளிக்கடை பகுதிகள், எட்டயபுரம் ரோடு இடதுபுறம், தொழிற்பேட்டை பகுதிகள் மற்றும் வடக்கு திட்டங்குளம் முழுவதும் உள்ள பகுதிகள் அனைத்தும் ஜூன் மாதம் மின் கணக்கீடு செய்யபப்ட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது,
தற்போது நிர்வாக காரணங்களுக்காக இம்மின் பகிர்மானங்க்களை மறு சீரமைப்பு செய்து கடலையூர் மின் அலுவலக பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் ஜூலை மாதம் மட்டும் தொடர் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
ஆகையால் மின் நுகர்வோர்கல் மின் கட்டண தொகையை மின் கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து வழக்கம் போல் மின் கணக்கீடு செய்யப்படும்.
மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மின் இணைப்புகள் ஜூலை மாதம் முதல் கடலையூர் பிரிவு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.