காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் சர்வதேச யோகா தினம்; மாணவர்கள் அசத்தல்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று யோகா தினம் இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
500 ஆண்டுகளுக்கு முன்இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோக கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.
யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல் ஆகும். “யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.
ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். யோகாவின் பெருமையை போற்றும் வகையில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டியில் உள்ள காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ.பள்ளியில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மாணவ, மனைவிகளும் யோகா கற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று காலையில் பள்ளிக்கூடம் தொடங்கியதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் சி.ஜெயக்குமார், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ. மாணவிகள் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் பத்மாசனம், வீராசனம், யோகமுத்ரா, சானு சீரானம், நவாசனம், மச்சாசனம், சலபாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினார்கள்.
இதனை கூடி இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். மாணவர்களின் யோகாசன நிகழ்ச்சி மொத்தம் 45 நிமிடங்கள் நடைபெற்றது. யோகாசனம் செய்து காட்டிய மாணவர்களை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.







