ஐ. சி. எம். நடுநிலை பள்ளியில் யோகா தினம்
கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு இசிஏ மாஸ்டர் அசோசியேசன் சார்பாக உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு இ.சி.ஏ. மாஸ்டர் அசோசியேசன் சார்பாக ஆர் பிரசன்னா, எஸ் நல்லதம்பி, வெங்கடேசன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் ஜெகன் யோகாவின் சிறப்பு குறித்து விளக்கினார். பள்ளி மாணவ மாணவியருக்கு யோகாசனங்களை பயிற்றுவித்தார்