திருப்பாவை பாசுரங்களை கற்ற சிறுவர், சிறுமிகளின் அரங்கேற்றம்-கோலாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பெற்றெடுத்த கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை முப்பது பாசுரங்களை கோவில்பட்டி லட்சிமி மில் மேல காலனி சமுதாயக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு கற்றுத்தரும் நிகழச்சி நடைபெற்றது.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 ,மணிவரை கற்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை சேவகாலமும், பஜனையும், கோலாட்டமும் சொல்லி தரப்பட்டது.

நேற்று 5 -ந் தேதியுடன் ஒரு மாத பயிற்சி நிறைவடைந்தது. கோவில்பட்டி ஆண்டாள் ரங்கமன்னார் நர்த்தன பஜனை தலைவர் சீனிவாச ராமுனுஜ தாசன் பயிற்சியை நடத்தினார்.
பயிற்சி நிறைவை யொட்டி நேற்று மாலை மாணவ, மாணவிகளின் அரங்கேற்றம் மற்றும் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களையும் கற்றுக்கொண்ட மாணவர்களின் அரங்கேற்றம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது, கோலாட்டம் குஷிப்படுத்த்தியது.







