கோவில்பட்டியில் ஜே.காம். அமைப்பு தொடக்கம்; முதல் சேர்மனாக அருண்பிரசாத் பதவி ஏற்றார்  

 கோவில்பட்டியில் ஜே.காம். அமைப்பு தொடக்கம்; முதல் சேர்மனாக அருண்பிரசாத் பதவி ஏற்றார்  

ஜே.சி.ஐ.அமைப்பின் துணை அமைப்பாக ஜே.காம். விளங்குகிறது. தொழில் முனைவோர் முன்னேற்றம் காணும் வகையில் உருவான இந்த அமைப்பு கோவில்பட்டியில் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான முயற்சியில் ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் ஈடுபட்டார்.

அதன்படி ஜே.காம் உருவாகி தொழில் முனைவோரின் 5 மாதிரி சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன, வெற்றிகரமாக இந்த கூட்டம் நடந்து முடிந்ததையொட்டி இன்று கோவில்பட்டியில் ஜே.காம் தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க விழா பைபாஸ் சாலையில் உள்ள கணேஷ் பேக்கரி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக கோவில்பட்டி மட்டுமின்றி விருதுநகர், திருநெல்வேலி, அறந்தாங்கி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்தும் ஜே.காம் பிரதிநிதிகள் வந்து இருந்தனர்,

ஜே.காம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ரீஜெண்ட் உரிமையாளர் எஸ்.ஹரிபாலகன் கலந்து கொண்டு பேசினார். கவுரவ விருந்தினராக ஜே.சி.ஐ.மண்டல தலைவர் கார்த்திக், இன்றைய விருந்தினராக ஜே.காம் மண்டல சேர்மன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

ஜே.காம் சேர்மன் பதவி ஏற்புக்கு பிறகு
ஜே காம் நிர்வாகிகள் பதவி ஏற்ற காட்சி
சிறப்பு விருந்தினர் ரீஜெண்ட் ஹரிபாலகன் பேச்சு.
ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் பேச்சு
பேபிஸ் பேரடைஸ் கண்ணப்பன் பேச்சு
தொழில் முனைவோரில் ஒரு பகுதியினர்

மண்டல டைரக்டர் ஜினேஷ் சாம் ஜோஸ் மண்டல அதிகாரி சிவா சுப்பிரமணியன், பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினர் உள்பட அனைவரும் பேசினார்கள்.

இதை தொடர்ந்து ஜே.காம். அமைப்பின் முதல் சேர்மன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேர்மனாக அருண்பிரசாத் பதவி ஏற்றுக்கொண்டார், ஜே.காம் உறுதிமொழியை சொல்லி பதவி ஏற்றுகொண்டார். ஜே.சி.ஐ.மண்டல தலைவர் கார்த்திக் உறுதிமொழியை படிக்க அதை அருண்பிரசாத் திரும்ப சொல்லி பதவி ஏற்றார்,

பின்னர் சேர்மன் அருண்பிரசாத் உறுதிமொழியை வாசிக்க  அதனை திரும்ப சொல்லி , துணை சேர்மனாக சுரேந்தர், செயலாளராக  முரளிகிருஷ்ணன், பொருளாளராக ராகேஷ், இயக்குனர்களாக முருகன் நடராஜன், ஸ்டீபன் நரேஷ் ஆகியோர் பதவி ஏற்றனர்,

இதன்பின்னர் விழாவில் கலந்து கொண்டிருந்த தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் தங்கள் தொழில் பற்றி 30 வினாடிகள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி பேபிஸ் பேரடைஸ் ஏ.கண்ணப்பன், நம்மவர் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்.ராஜவேல், கைரா டெக்னாலஜிஸ் செல்வலட்சுமி, கணேஷ் பேக்கரி அஜய் கணேஷ், சாய் மோட்டார்ஸ் தங்கராஜ், செக்கினா இசைப்பள்ளி ஜோய்ஸ் ஜெயராஜ், ரத்னம் நகைக்கடை ராஜரத்தினம், சென்ட்ரியோ சிவகுமார், மயில் அக்ரோ புட்ஸ் நெல்லையப்பன், அழகப்பா பல்கலைக்கழகம் வீணா பிரகாஷ், வெல்நெஸ் சென்டர் நடராஜன், பழனியாண்டவர் பாலிமேர்ஸ் ராஜ்குமார், , லைட் வேர்ல்ட் தினேஷ்பாபு, உதயா பிசியோகேர் உதயலட்சுமி, ஹைடெக் பியூட்டி பார்லர் அனிதா  உள்பட பலர் தங்கள் தொழில் நிறுவனங்கள் பற்றி விளக்கினர்.

விழாவில் ஜே.காம்.மண்டல பயிற்சியாளர் அருண், கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நடந்த அரங்கத்தின் உள்புறம் கைரா டெக்னாலஜிஸ் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு டிஜிட்டல் விளம்பரம் பற்றி விளக்கம் அளிக்கபட்டது. அரங்கத்தின் வெளியே பில்டிங் டாக்டர் நிறுவனம், ஈக்விடாஸ் நிதி வங்கி, லைட் வேர்ல்ட் அரங்குகள் இருந்தன. மேலும் சாய் மோட்டார்ஸின் மல்டி பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பார்வைக்கு வைக்கபட்டு இருந்தன. விழாவில் பங்கேற்றவர்கள் அரங்குகளை பார்வையிட்டனர்,

(S.K.T.S. திருப்பதிராஜன் )

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *