புதிய இணைப்பிற்கு மின்சார மீட்டர் வழங்குவதாக பணம் பறிக்கும் கும்பல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள்! விடுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி கோட்ட பகுதியில் பொதுமக்களிடம் மின்வாரிய பணியாளர்களை போன்று பேசி புதிய மின் இணைப்பிற்கு மீட்டர் வழங்குவதாக கூறி பணம் வசூல் செய்து சிலர் ஏமாற்றுவதாக தெரிகிறது .எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதிய மின் இணைப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்து கட்டணத்தை செலுத்திய பின்பு மீட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மொபைல் மூலம் பெறப்படும் .அதன் பிறகு மின்வாரிய பணியாளர்கள் மூலம் குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு மீட்டரை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது .]

புதிய மின் இணைப்பிற்கு ரொக்கமாக பணம் ஏதும் அலுவலகத்திலோ அல்லது பணியாளர்கள் மூலமாகவோ வசூல் செய்யப்படுவதில்லை. எனவே தங்களுடைய வீட்டிற்கு அல்லது நிறுவனத்திற்கு புதிய மின் இணைப்பிற்கு மீட்டர் வந்துள்ளது எனக் கூறி அதற்குரிய தொகையினை ரொக்கமாக வழங்க யாரேனும் கேட்டால் உடனடியாக கோவில்பட்டி கோட்டத்தில் பின்வரும் அலைபேசி எண்களில் ஏதேனும் ஒன்றை தொடர்பு கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் விஷமிகளை கண்டறிந்து காவல்துறையில் ஒப்படைக்க உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. செயற்பொறியாளர்/ விநியோகம்/ கோவில்பட்டி- 94458 54779 உதவிசெயற்பொறியாளர்கள் 1) ஊரகம்/ கோவில்பட்டி 94458 54786, கோவில்பட்டி /நகரம் 94458 54780, கயத்தார் 94458 54792
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







