கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாகம்; பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்
வைகாசி மாதம் வரும் பவுர்ணமி, வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
விசாகம் நட்சத்திரத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளன. அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தொடங்குவது இந்த விசாக நட்சத்திரங்கள்தான். இந்த விசாக நட்சத்திரத்திற்கு ஜோதிட ரீதியாக குரு அதிபதி ஆவார்.
Adவைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விகாசம் ஆனது, இன்று (ஜூன் 2) கடைபிடிக்கப்டுகிறது. இன்று காலை 5.55 மணிக்குத் தொடங்கி, 3 ம் தேதி காலை 5.54 வரை இந்த விசாகம் நட்சத்திரம் உள்ளது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி .:
காலை 10 மணிக்கு :பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11.30 மணிக்கு : சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7.மணிக்கு : பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற இருக்கிறது,.