கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை; டெண்டர் கோரப்பட்டது  

 கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை; டெண்டர் கோரப்பட்டது  

கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் இருந்து முடுக்கு மீண்டான்பட்டி வரை மொட்டைமலை அடிவாரத்தில் பழமையான விமான ஓடுதளம் உள்ளது.

கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலை நிர்வாகம், அதன் கிளையை 1941-ம் ஆண்டு கோவில்பட்டியில் நிறுவியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு விமானத்தில் வந்து செல்ல வசதியாக அரசிடம் அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில் 2 கி.மீ. தூரத்துக்கு  100 அடி அகலத்தில் விமான ஓடு தளம் அமைத்தனர்.

1978-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த ஓடுதளத்தில் செஸ்னா வகையை சேர்ந்த சிறிய ரக விமானத்தில் அவர்கள் வந்து சென்றுள்ளனர். 1993-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோவில்பட்டிக்கு வந்தபோது, இந்த ஓடுதளத்தில் தான் அவரது விமானம் இறங்கியது.

தற்போது இந்த ஓடுதளம் பயன்பாடு இல்லாமல் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக ஓடுதள தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. அருகே உள்ள விவசாயிகள் இதனை களமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம்(டிட்கோ) மூலம் கோவில்பட்டியில் உள்ள விமான ஓடுதளத்தை பயன்படுத்தி  விமானப் பயிற்சி மையம் நிறுவி தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர்  தங்கம் தென்னரசு ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த விமான ஓடுதளத்தை பயன்படுத்தி விமான பயிற்சி மையமாக நிறுவி பயன்படுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

ஓடுதள பாதையில் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில்,விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிக்காக  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆன்லைனில் டெண்டர் வெளியிட்டுள்ளது.tidco.com மற்றும் tntenders.gov.in என்ற இணையதளங்களில்  டெண்டரை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *