100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் மொழிப்போர் தியாகி பா.முத்து கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார்,
நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன் தலைமை தாங்கினார்., முன்னாள் நகர பொருளாளர் அண்ணாத்துரை,சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில்குமார், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் தங்கப்பாண்டியன், கருப்பசாமி மற்றும் அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.