கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறந்த ஆய்வு குழுவிற்கான பல்கலைக்கழக விருது
![கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறந்த ஆய்வு குழுவிற்கான பல்கலைக்கழக விருது](https://tn96news.com/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-01-at-12.38.03-PM-850x560.jpeg)
அகில இந்திய மானாவாரி வேளாண்மை திட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆகியவை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதி உதவியுடன் 1971-ம் ஆண்டு முதல் மானாவாரி விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/05/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
இந்த திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக (2018 – 2022) ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள், செயல் விளக்கங்கள், விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் ஆராய்ச்சி பதிப்பு மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வுக் குழுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகததால் தேந்தெடுக்கப்பட்டது.
.இதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி; முன்னிலையில் கோவில்பட்டி அகில இந்திய மானாவாரி வேளாண்மை திட்டத்திற்கான சிறந்த குழு விருது தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாளில் (1.6.2023) வழங்கப்பட்டது.
இவ்விருதினை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் ஆய்வுக்குழு முதன்மை விஞ்ஞானி முனைவர். கோ. பாஸ்கர் மற்றும் சக விஞ்ஞானிகளான சோ. மனோகரன, வி. சஞ்சீவ்குமார் மு. மணிகண்டன், மற்றும் கு.குரு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)