• May 20, 2024

மணக்கரை தூய திரித்துவ ஆலயத்தில் அசன பண்டிகை ; நன்கொடை பொருட்கள் ஏலம் களைகட்டியது

 மணக்கரை தூய திரித்துவ ஆலயத்தில் அசன பண்டிகை ; நன்கொடை பொருட்கள் ஏலம் களைகட்டியது

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி சேகரம் மணக்கரை சபைக்கு உட்பட்ட தூய திரித்துவ ஆலயத்தில் 55-வது பிரதிஷ்டை பண்டிகை, ஸ்தோத்திர பண்டிகை, அசன பண்டிகை என முப்பெரும் பண்டிகை 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் இரவு ஆயத்த ஆராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு ஆலய பிரதிஷ்ட பண்டிகை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற்றது.

இந்த ஆராதனை நிகழ்ச்சிகளை  ஆலயத்தின் சேகரகுரு  இம்மானுவேல் அற்புதகுமார் நடத்தினார்.

மணக்கரை மற்றும் கொங்கராயகுறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கு பெற்றனர். அவர்களில் பலர் ஆலயத்துக்கு நன்கொடையாக பல்வேறு பொருட்களை வழங்கினர்.

இந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தை ஜெயபால் நடத்தினார். சபை ஊழியர் செல்வின் இதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். சேலை, பேன்ட், சட்டை துணி, மாம்பழம், கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய். எள்ளு மிட்டாய், பிளாஸ்டிக் தட்டுகள், சப்போட்டா பலம், எவர்சில்வர் பாத்திரங்கள் போன்றவை ஏலம் விடப்பட்டன,

இவற்றை ஒவ்வொருவரும் போட்டி போட்டு அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அசன விருந்து தொடங்கியது. ஆட்டுக்கறி குழம்புடன் சாதம் பரிமாறப்பட்டது. ஊர்மக்கள் மட்டுமின்றி பக்கத்து ஊரிகளில் இருந்தும் வந்து விருந்தில் கலந்து கொண்டனர், இரவு 11 மணி வரை விருந்து நடைபெற்றது. சுமார் 1,300 பேர் வரை பங்கேற்றனர்.

விருந்து ஏற்பாடுகளை சபை உறுப்பினர்கள் ஏசுதுரை, ஜெயராஜ் விக்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *