• May 20, 2024

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம்; தூத்துக்குடி தொழில்மைய பொதுமேலாளர் சுவர்ணலதா விளக்கம்

 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம்; தூத்துக்குடி தொழில்மைய பொதுமேலாளர் சுவர்ணலதா விளக்கம்

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் (AABCS) என்ற பெயரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பற்றி தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா விளக்கம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தில் சுயதொழில் தொடங்க கடன்/மானியம் பெற தகுதி:-

*ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்.(தனி நபர்கள், உரிமையாளர் நிறுவனங்கள், பங்குதாரர் நிறுவனங்கள், பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்)

*வங்கிகடன் இல்லாமல் சொந்த முதலீட்டில் தொடங்கப்படும்  தொழில் நிறுவனங்கள்.

வயது:- புதிய தொழில் முனைவோர்களாக இருப்பின் 18 முதல் 55 வயது வரை. தொழில் விரிவாக்கம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை,.

திட்டமதிப்பீடு:- நேரடி வேளாண்மை தவிர்த்து ஏனைய தொழில்கள்.

  1. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு  உச்சவரம்பு இல்லை.
  2.  வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் முதல்.
  3. கால்நடை, மீன் மற்றும் தேனீ வளர்ப்பு தொழில்களுக்கு ரூ.25 லட்சம் முதல்.

மானிய உதவி:- திட்ட மதிப்பீட்டில் 35% (அதிகபட்சமாக ரூ.1.50 கோடி) மற்றும் முறையாக செலுத்தும் வட்டியில் 6% மும்முனை வட்டி மானியம் வழங்கப்படும். (அதிகபட்சம் 10 ஆண்டுகள்)

பயிற்சி: கடனுதவி பெரும் விண்ணப்பதாரருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,

கல்வித்தகுதி: தேவை இல்லை.

வருமான உச்சவரம்பு: இல்லை.

சொந்த முதலீடு: தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பங்கள் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *