• May 20, 2024

கோவில்பட்டியில் மகளிர் ஆக்கி : ஈரோடு அணி சாம்பியன்

 கோவில்பட்டியில் மகளிர் ஆக்கி : ஈரோடு அணி சாம்பியன்

கோவில்பட்டி தெற்குத் திட்டங் குளம் பாரதி ஆக்கி கிளப் நடத்தும் மாநில அளவிலான பெண்களுக்கான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி-2023 கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில் 10 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் ஈரோடு கே. ஓ. எம் ஆக்கி கிளப் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் உடுமலைப்பேட்டை எல் . எம். சி. ஆக்கி கிளப் அணியினரை தோற்கடித்து சா ம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

மூன்றாம் மற்றும் நான்காம் இடங்கான போட்டிகளில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஆக்கி கிளப் அணியினர் பாரதி ஆக்கி கிளப் அணியனுடன் விளையாடியதில் சமநிலையில் முடிந்ததால் டை பிரேக்கர் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.


இந்த போட்டியின் சிறப்பு விருந்தினராக ஒன்றிய செயலாளர் பிக்கிலிபட்டி முருகேசன், சுபாஷ் பில்டர்ஸ் சண்முகராஜ், திமுக பொறியாளர் அணி ரமேஷ், தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன் பேச்சியம்மாள், கரிதா மேல்நிலைப்பள்ளி தாளாளர் காசிராஜன் நாகமுத்து வேல்ஸ் வித்யாலயா தாளாளர் நாகமுத்து, முனைவர் குரு சித்திர சண்முக பாரதி ஊர் தலைவர் அசோக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
, விழா ஏற்பாடுகளை பாரதி ஆக்கி கிளப் செயலாளர் சந்தனராஜ் தலைவர் உமா சங்கர், பொருளாளர் ஆனந்த பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *