பாஞ்சாலங்குறிச்சியில் சாலை சீரமைப்பு பணி
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியர் குடியிருப்பு நுழைவு வாயில் அருகே விநாயகர் கோவில் முன்புறம் செல்லக்கூடிய சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்து வந்தது.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள வீரசக்கதேவி 67 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் சாலையை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேசிடம் கோரிக்கை வைத்தனர்..
நேற்று மாலை நுழைவாயில் அருகே சேதம் அடைந்திருந்த சாலையை யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், அவர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக எடுத்த துரிதமான நடவடிக்கையின் காரணமாக இன்று (வியாழக்கிழமை) சேதமடைந்திருந்த சாலையில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது..
யூனியன் ஆணையாளர் .சிவபாலன், பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்.கமலாதேவி யோகராஜ் கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்.அருண்குமார்மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் .மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







