நிதி அமைச்சர் கூறிய 100 கோடி ரூபாய் சொத்து குவிப்பு பற்றி மத்தியஅரசு விசாரணை நடத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
சென்னை ராயபுரத்தில் நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழவகைகளை கொடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது .ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலப் பணிகளை அ.தி.மு.க. செய்து வருகிறது பொய் ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது தி.மு.க..
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சேமித்த சொத்துக்களை விட, உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் பல 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளது குறித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இது மத்திய அரசின் பொறுப்பு தி.மு.க. வினரின் சொத்து குவிப்பு விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கையை அ.தி.மு.க. எடுக்கும்
ஓ.பன்னீர்செல்வம் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர், டி.டி.வி.தினகரன் , சசிகலா உள்ளிட்டவர்களை தவிர மற்ற யார் அ.திமுக வுக்கு வந்தால் வரவேற்போம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் சர்வசாதரணமாக நடக்கிறது, காவல்துறை சுதந்திரமாக இல்லை தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செய்படமுடியாமல் முடங்கிபோய் உள்ளது., காவல் துறை அதிகாரிகள் தி.மு.க. வினரால் மிரட்டப்பட்டு வருவதால் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படமுடியாமல் உள்ளனர்
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் சர்வ சாதரனமாக கிடைக்கிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் கஞ்சா அதிகம் கிடைப்பது தமிழகத்தில் தான்
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.







