கோவில்பட்டியில் தீ சேவை தினம்; தீயணைப்பு வீரர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தீ சேவை தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
1944 ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் உள்ள துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்களின் மீட்பு பணியின் போது 66 தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். தீயணைப்பு வீரர்களின் தியாகத்தினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ சேவை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
கோவில்பட்டியில் இன்று நடந்த தீ சேவை தின நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.பொதுமக்கள் அனைவருக்கும் தீ சேவை தினம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவிமாணிக்கம் தலைமை தாங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் சுந்தர்ராஜ்,ரோட்டரி சங்க துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்பு மீட்பு பணிகள் துறை முன்னணி தீயணைப்போர் கருப்பசாமி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி,சீனிவாசன்,மாரியப்பன், முத்து முருகன்,காளியப்பன், பூல்பாண்டி,சரவணன், நடராஜன்,உள்பட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார்.







