நிழற்குடை அமைக்கும் பணி: சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தனர்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பனி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தனர்..
இந்நிகழ்வில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் .ரத்தினவேல், மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் .பிரேமா. கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்.அருண்குமார்,ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







