ஓட்டப்பிடாரம் தொகுதியில் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயங்க ஏற்பாடு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சி அனந்தமாடன் பச்சேரி கிராமத்தில் 5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடியில் இருந்து அனந்தமாடன் பச்சேரி வழியாக குளத்தூர் செல்லும் 53 D அரசு நகர பேருந்தை மீண்டும் இயக்க வழிவகை செய்து தருமாறு கிராம பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி.சண்முகையா அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்..
இதயனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அனந்தமாடன்பச்சேரியில் மீண்டும் அரசு நகர பேருந்து வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது.. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் 53 D அரசு நகர பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பல வருடங்களாக இயக்கப்படாமல் இருந்த பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் ஊர் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.. இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் மாரியப்பன், தூத்துக்குடி நகர பணிமனை கிளை மேலாளர் .ஜெகதீசன். தொ.மு.ச. செயலாளர் மரியதாஸ் அனந்தமாடன்பச்சேரி கிளை செயலாளர் பாலமுருகன் ஒன்றிய பிரதிநிதி மாயகிருஷ்ணன் ஒன்றிய இளைஞரணி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்







