தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,.மாவட்ட அவைத்தலைவர் .செல்வராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ,தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,தூத்துக்குடி மாநகர மேயர் .ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான .கீதாஜீவன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் விளாத்திகுளம் பொறுப்பாளர் வேலுச்சாமி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் .மும்மூர்த்தி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.







