• November 13, 2024

நடிகர் அஜித்குமார் தந்தை மரணம்; மு.க.ஸ்டாலின் இரங்கல்

 நடிகர் அஜித்குமார் தந்தை மரணம்; மு.க.ஸ்டாலின் இரங்கல்

மிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் காலமானார். மறைந்த சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.

. நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்., நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அஜித்குமார் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.

தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *