• November 15, 2024

தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய பட்டியலை வெளியிட வேண்டும்; அமைச்சரிடம் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

 தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய பட்டியலை வெளியிட வேண்டும்; அமைச்சரிடம் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சென்னை தலைமைச்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசனை கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினார்கள். அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய குழு கூட்டத்தில் சீன நாட்டு  சிகரெட் லைட்டரை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மூலமாக தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்ற ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீனா  பிளாஸ்டிக் லைட்டரை பறிமுதல் செய்வதற்கு  தனி குழு அமைத்ததற்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டோம்

மேலும் தீப்பெட்டி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய பட்டியலை வெளியிட வேண்டிக் கொண்டோம் அவர்களும் விரைவில் அரசாணை வெளிவர தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். மேலும் தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய கோவில்பட்டிக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் அவசியம் வருவதாக ஒப்பு கொண்டார் அப்பொழுது தீப்பெட்டி தொழில் சார்பான கோரிக்கை மனுவினை அமைச்சர் இடத்தில் வழங்கினோம்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.                                                                     

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *