• November 15, 2024

அரசு வேலை வாங்கி தருவதாக பண  மோசடி; மாணவர் விடுதி காப்பாளர் கைது

 அரசு வேலை வாங்கி தருவதாக பண  மோசடி; மாணவர் விடுதி காப்பாளர் கைது

தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (வயது 37) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

.இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அறிமுகமாகி  அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து மொத்தம் ரூ 11,28,500/- பெற்று கொண்டு மோசடி செய்ததாக  அன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதை த தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயராம்   மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தி அலெக்சாண்டரை கைது செய்து பேரூரணி சிறையிலடைத்தனர்.

மேலும்  அலெக்ஸாண்டர் தூத்துக்குடி, திருநெல்வேலி சென்னை ஆகிய மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி ரூ. 1,26,68,500/- வரை பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *