கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கண்களை மறைத்தபடி மனு
கோவில்பட்டி கோட்டாட்சியரை சமூக ஆர்வலர்கள் ராமகிருஷ்ணன், மாரிமுத்து, ராமகிருஷ்ணன், ராஜெசுகண்ணன், முருகன் ஆகியோர் இன்று சந்தித்தனர். கண்களை மறைத்தபடி இருந்த அவர்கள் பொதுமக்கள் சார்பாக கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. கித்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த இடையூறாக இருப்பதுடன் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு அரசு அதிகாரிகள் துணை இருக்கின்றனர்,
லட்சுமி மில் பாலம் முதல் ரெயில் நிலையம் அருகே உள்ள பாலம் வரை, புதுரோடு, கடலையூர் ரோடு, மாதாகோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மந்திதொப்பு ரோடு பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக செல்லமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் பெருகி இருக்கின்றன.
இந்த பகுதி முழுவதும் இருவழி சாலை என்பது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஒருவழி சாலை ஆகி விட்டது. நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராததற்கு காரணம் பணமா? அரசியலா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் கோவில்பட்டி நகரில் அழகாய் கெடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ,மனுவில் கூறப்பட்டு இருந்தது.