• November 15, 2024

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவராக ஆர்.லவராஜா பதவி ஏற்பு

 கோவில்பட்டி கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவராக ஆர்.லவராஜா பதவி ஏற்பு

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி (A 393) வேலாயுதபுரம், புதுரோடு, பஸ் நிலையம் அருகே ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பொறுப்பு தலைவராக திமுக கவுன்சிலரம், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.லவராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து இன்று காலை ஆர்.லவராஜா கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவராக பதவி ஏற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சி வேலாயுதபுரம் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

ராகவேந்திரா ஸ்ரீ அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் ஜோதி காமாட்சி,, பொருளாளர் கார்த்திகேயன், தொழில் அதிபர்கள் அசோக், நடராஜன், தேவி பிரேம்ஸ் சண்முகசுந்தரம்,ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் உள்பட பலர் லவராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *