கோவில்பட்டியில் அக்குபஞ்சர் இலவச மருத்துவ முகாம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,நலன் பவுண்டேஷன் சார்பில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, நலன் பவுண்டேஷன் நிர்வாகி வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
அக்குபஞ்சர் இலவச மருத்துவ முகாமினை ரோட்டரிமாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தொடக்கி வைத்து பேசினார்.
மருத்துவ முகாமில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வருகை தந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,மூட்டு வலி,முதுகு வலி,ஒற்றைத் தலைவலி,மாதவிடாய் பிரச்சனைகள்,மற்றும் பல்வேறு நோய்களுக்கும் அக்குபஞ்சர் மருத்துவர்கள் ,தேவி,ஜெரால்டு,சதீஷ்,சஞ்சய்ஆகியோரால் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன/.
இம் முகாமில் கால்நடைத்துறை குமார்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வம், வீராச்சாமி,மாரியப்பன்,நடராஜன்,முத்து முருகன்,ராஜமாணிக்கம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில ரோட்டரி சங்க உறுப்பினர் பூல் பாண்டி நன்றி கூறினார்.