ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கலைப்பிரிவினர் 2 நாட்கள் பிரசாரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்..இளங்கோவனை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவினர் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் இரண்டு நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
நேற்று, மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்கள் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்கள், பாபு, மயிலை அசோக்குமார், மாவட்ட கலைப்பிரிவின் தலைவர்கள் ஜாபர் அலி, அர்ஜுன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் பலத்தில், ஈரோடு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்பதை களத்தில் நேரடியாக காணமுடிந்தது என்று பிரசார முடிவில் கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.







