• October 22, 2026

நடிகர் மயில்சாமி திடீர் மரணம்

 நடிகர் மயில்சாமி திடீர் மரணம்

காமெடி நடிகர் மயில்சாமி சென்னையில் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று (19-ந் தேதி ) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார்.

தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார்.

அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை கூட முடித்துவிட்டு வந்தார்.

ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *