`அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்’-பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டி
சி.டி.ரவி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தனித்தனியே சந்தித்த பின் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப்பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. மி
ன்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாசாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது. கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு திமுகவுக்கு எதிராக தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை காட்டுகிறது. இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும் குறிப்பாக திமுக எவ்வாறு பண பலத்தை பயன்படுத்தும், அரசு எந்திரத்தை பயன்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் அதை ஈரோட்டில் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை. இன்று காலை எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர் செல்வத்தை நாங்கள் சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல், தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். எங்கள் தேசியபொதுச்செயலாளர் ஜேபி நட்டா சார்பாக சில தகவல்களை நான் இருவரிடமும் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) எடுத்துக்கூறினேன். நான் அவர்களிடம் தனித்தனியே என்ன கூறினேன் என்று இப்போதைக்கு உங்களிடம் கூற முடியாது.
தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துங்கள் என்று ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருவரிடமும் கூறினோம்.. அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாள் 7-ம் தேதி. நான் நம்புகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிக்க வரும் 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்,
அதிமுகவை ஒன்றிணைக்கும் உங்கள் முயற்சிக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒப்புக்கொண்டனரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சிடி ரவி, ‘அனைத்து தகவலையும் இங்கு கூறமுடியாது’ என்றார்.







