ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக அத்துமீறல்கள்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார் புகார் மனு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:-‘
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு ஜனநாயக அத்துமீறல்களை ஆளும் விடியா திமுக அரசு அரகேற்றியுள்ள நிலையில் இதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் செய்த அத்துமீறல்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளோம்.இ
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக அங்கு 238 பூத்கள் உள்ளன.இந்த 238 பூத்களிலும் எங்கள் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு,வீடாகச் சென்று ஆய்வு செய்யும்போது கிட்டதட்ட 30 ஆயிரம் பேர்களிலிருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. ஆட்கள் இல்லாமல் ஓட்டு அங்கு ஒரு போலி வாக்காளர் அட்டைகளைத் தயாரித்து அந்த 40 ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்றைக்கு விடியா திமுக அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ள நிலையை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்.
பூத்களை கணக்கெடுப்பு செய்யும்போது ஆட்களே இல்லாமல் வாக்குகள் உள்ளது.இதனைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.அவரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
237 நம்பர் பூத் ரெயில்வே காலனியில் மக்களே இல்லை.கிட்டதட்ட 180 வாக்குகள் இருக்கும்.இந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.அங்கு இருக்கும் மக்கள் வேறு இடத்தில் இருந்தால் அவர்களுக்குத் தகவல் தெரிவித்து ஜனநாயக கடமையைச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்
.இது மட்டுமல்லாமல் பணப் பட்டுவாடா நடக்கிறது.விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை திமுக அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம்.இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
இரட்டை இலை சின்னம்
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார்.இரட்டை இலை சின்னம் முடக்கக்கூடிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறதே
பதில் :சொல்பவர்களுக்குத்தான் முடக்குவாதம்.கட்சி என்பது நாங்கள்தான். சரியான வழிமுறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றோம்.வழக்கு நிலுவையில் இருக்கும்போது வழக்கு குறித்துப் போகக்கூடாது.இது சரியான செயலாக இருக்காது.அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டி என்பது பொதுமக்களுக்கும் தெரியும்,ஓ.பன்னீர்செல்வம் குழுவில் இருப்பவர்களுக்கும்,அவரை சார்ந்து இருப்பவர்களுக்கும் தெரியும்.கட்சிக்காரர்களுக்குத் தெரியாது.அவரை சார்ந்தவர்களுக்கு அது ஒரு மண் குதிரை என்று தெரியும்.இதனை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும்.பொதுமக்களுக்கும் தெரியும்.அது மண் குதிரை .கரை சேராது.
பேனரில் கூட்டணி பெயர் மாற்றம்
கேள்வி : அதிமுக சார்பில் வைக்கபட்ட பேனரில் கூட்டணி பெயர் வேறாக இருந்து.பின்பு திருத்தப்பட்டுள்ளதே.
பதில் :டைப் செய்யும்போது சிறிய பிழை வரும். பிரிண்ட் செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது.பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது.இது ஒரு பிரச்சனை இல்லையே.
கேள்வி :அண்ணாமலை டெல்லி சென்றபின்னர் தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்கிறார்களே
பதில் : இது காரணம் இல்லை.எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பாஜக தலையிட்டது கிடையாது.எங்களைப் பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது.பின்னர் சரி செய்யப்பட்டது.
கேள்வி : பாஜக தலைவர்கள் படமும் இடம்பெறவில்லையே
பதில் : கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் எல்லோருக்குமான மரியாதை,முக்கியத்தும் அளிக்கப்பட்டுவருகிறது.ஒரு படத்தை வைத்து மரியாதை கிடையாது.கண்டிப்பாகக் கூட்டணி தர்மத்தின்படி தான் செயல்படுவோம்.
கேள்வி : இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சித்தலைவர்களுடைய படங்கள் இடம்பெறுவது வழக்கம்.ஆனால் தற்போது இல்லை.அதனால் பாஜக உங்கள் கூட்டணியில் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா
பதில் : தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி.இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி.தற்போது இடைத்தேர்தலில் ஆரம்ப நிலையில் இருக்கின்றோம்.இறுதி செய்யப்படும்போது யார் யார் எல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் அனைவரின் படமும் இடம்பெறும். 2019 ல் பியூஸ்கோயல் மத்திய அமைச்சராக இருந்தபோதே என்ன சொன்னார்.அதிமுக தலைமையிலான கூட்டணிதான் என்று சொன்னார்.அப்போது பா.ஜ.க.வும் இருந்ததல்லாவா? அதுபோல மாநிலத்தைப் பொறுத்தவரையில் எங்கள் தலைமையில் கூட்டணி. இந்த கூட்டணி என்பது இன்றைக்கும் தொடர்கிறது.அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கடலில் பேனா சின்னம்
கேள்வி : கடலில் பேனா சின்ன கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் சிலையை உடைப்பேன் என்று பேசியுள்ளார்.இதில் அதிமுகவின் கருத்து என்ன
பதில் : கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது சுற்றுச்சூழல் துறை நடத்தியது.அது அரசின் அமைப்பு கடலில் பேனா சின்னம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மீனவர்களுக்குத்தான்.ஏன் என்றால் மீனவர்கள் வலை போட முடியாது.அவர்கள் கரைக்குப் படகைக் கொண்டுவர முடியாது. சுற்றுப்புறச்சூழல் பாதிக்கும்.வரலாற்றை மறைக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் செயல்படுகிறார்கள்.வள்ளுவன் சிலை 133 அடியில் உள்ளது.இவருக்கு மட்டும் ஒரு அடி அகலம்,நீளம் ஏன்.தமிழகத்தில் உயரமான சிலை என்றால் தமிழகத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் பேனா சிலை.அப்படி என்றால் யார் சிலை மறையும். திருவள்ளுரின் சிலை மறையும். எப்படிப்பட்ட வக்கிர புத்தி பாருங்கள்.134 அடியில் வைக்கவேண்டுமாம்.பொதுவாக மெரினா கடற்கரையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று பார்த்தால் அம்மாவின் நினைவிடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் இருக்கும்.அதேபோல புரட்சித்தலைவர் நினைவிடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் இருக்கும். கருணாநிதி நினைவிடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் இருக்கும்.இதனை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அதனுடைய வெளிப்பாடுதான் பேனா வைப்பது.உயர்நீதிமன்றமே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற விஷயங்களில் பொதுவாக அரசின் பணத்தை விரயம் செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளது.உங்களுக்கு அறிவாலயம் உள்ளது.அதன் முகப்பில் மக்களின் பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவேண்டும்.அதன் உள்ளே பூங்கா என்று அமர முடியுமா. எப்படி விட்டுவார்கள்.அங்கே சென்று சிலையை வையுங்கள்.133 அடிக்கு வையுங்கள்.எத்தனை அடிக்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.இந்தியாவிலேயே அதிகமான நிதி உள்ள கட்சி திமுக.நிதிக்குப் பஞ்சமே கிடையாது. அந்த நிதியிலிருந்து செலவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.யாரும் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை. ஏன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அங்குப் பேனா வைப்பது அவசியமா. சுற்றுச்சூழல் கூட்டத்தில் மீனவர்கள் சென்று கருத்து தெரிவிக்கலாம்.மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் சொல்லாம். அது கருத்துக் கேட்புக் கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொதுக்கூட்டமாகப் போய்விட்டது.அந்த கூட்டத்தில் முழுக்க முழுக்க சமூக விரோதிகளை இறக்கி யாரையும் பேச விடாமல் செய்து,கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்காமல்,கருத்துகளைச் சொன்னால் அடிப்பது,கத்துவது போன்ற செயல்கள் அரங்கேறும் நிலைமை இருந்தது.ஒரு கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத ஆட்சி இது. கருத்துக்கு மதிப்பு கொடுக்காத ஆட்சி.கருத்தை அழிக்க செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பது வெட்ட வெளிச்சமாக இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு எள்ளி நகையாடக்கூடிய வகையில்தான் இருந்தது.கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது முழுமையாக மீனவர்களும்,மீன் பிடி தொழிலைச் சார்ந்தவர்களும் வந்து கேட்பதுதான் சிறந்தது. சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் பேசி ஒரு திமுக கூட்டம்போலத்தான் அந்த நிகழ்வு இருந்தது.எங்களைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் பேனாவை அறிவாலயத்தில் அமைத்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை ஓகே.மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுப்படும்போது அதிமுகவைப் பொறுத்தவரையில் கடுமையாக எதிர்க்கும்.மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சின்னதம்பி அங்கு இந்த செயல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று பேசுகிறார்.அவரை பேச விடவில்லை.அடக்கு முறையால் எதையும் சாதித்துவிடலாம் என்று ஏதேச்சயதிகரமாக செயல்படுவதுதான் இந்த அரசு.
தேர்தல் ரத்தாகுமா?
கேள்வி : தொடர் புகார்கள் அதிமுக சார்பாகவும்,பாஜக சார்பாகவும் அளிக்கப்பட்டுவரும் நிலையில் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதா
பதில் : எங்களைப் பொறுத்தவரையில் ஜனநாயக விரோத செயல்கள்,அடங்குமுறைகள் நடக்கும்போது எங்கே முறையிடுவோம். ஆணையத்தில்தான் முறையிடுவோம்.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.
கேள்வி : தேர்தல் நெருங்கும் இந்த நிலையில் பாஜக எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்களே.
பதில் : தேசிய ஜனநாயகக் கூட்டணி தர்மத்தின்படி தான் இன்றைக்குச் சென்று கொண்டுள்ளோம் அதிமுகவைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆதரவைக் கேட்டுள்ளோம் அவர்கள் தேசிய கட்சி.உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள்- நாங்கள் உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியுமா.
கேள்வி :ஓ.பன்னீர்செல்வம் பாஜக வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் வாங்கிவிடுவோம் என்கிறார்.
பதில் : நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.







