கோவில்பட்டி – கடம்பூர் இரட்டை ரெயில் பாதை பணி: முழுமையாக, பகுதியாக ரத்தாகும் ரெயில்கள்
கோவில்பட்டி – கடம்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்காக இந்த பகுதியில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
முழுமையாக ரத்தாகும் ரெயில்கள்
* ஜனவரி 9 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரெயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரெயில் (22621)
* திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரெயில்கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்தாகும் ரெயில்கள்
*பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரெயில்கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11 ஆகிய நாட்களில் விருதுநகர் – திருச்செந்தூர் இடையேயும் ஜனவரி 10 அன்று மதுரை – திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
* ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரெயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரெயில் (16846) ஆகியவை திண்டுக்கல் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரெயில் (20691) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் (20692) ஆகியவை திருச்சி – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கோயம்புத்தூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரெயில்கள் (16322/16321) ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் ஈரோடு – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* ஜனவரி 9, 10 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரெயில் (16730) மற்றும் ஜனவரி 10, 11 அன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர் விரைவு ரெயில் (16731) ஆகியவை திருநெல்வேலி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* ஜனவரி 9, 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரெயில் (16105) மற்றும் ஜனவரி 10, 11 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரெயில் (16106) ஆகியவை திருச்சி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* ஜனவரி 10 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரெயில் (16236) மற்றும் ஜனவரி 11 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரெயில் (16235) ஆகியவை விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்று பாதையில் இயக்கப்படும் ரெயில்கள்
* ஜனவரி 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரெயில் (16127) மற்றும் ஜனவரி 10 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16128) ஆகியவை திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு முறையே 160 மற்றும் 125 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி மற்றும் திருச்சி சென்று சேரும்.
* ஜனவரி 10 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரெயில் (17235) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 140 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி சென்று சேரும்.
கால தாமதமாகும் ரெயில்கள்
*ஜனவரி 10 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில் (22628) 90 நிமிடங்கள் கால தாமதமாக திருச்சி சென்று சேரும்.
* ஜனவரி 10 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரெயில் (12631) மற்றும் முத்து நகர் விரைவு ரெயில் (12693) ஆகியவை முறையே 40 மற்றும் 30 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சென்று சேரும்.
* ஜனவரி 12 அன்று திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரெயில் (06680) திருச்செந்தூரில் இருந்து 110 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.







