12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை 4-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
