உணவு பொருளில் கலப்படம்:; 2 பேருக்கு ஒரு நாள் சிறை தண்டனை
திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள கடைகளில் கடந்த 2019ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது ஒரு மளிகை கடையில் உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து கடை உரிமையாளர் ஆயுப்கான் மற்றும் மசாலா பொருள் தயாரித்த ராஜா ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று வழக்கு விசாரணையில் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் மீனாட்சி உத்தரவு பிறப்பித்தார்.







