நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமுர்த்தி மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் டி. சிவ நாராயணமுர்த்தி நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67
பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவ நாராயணமூர்த்தியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் முக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் சிவநாராயணமூர்த்தியை நடிகரும் இயக்குநருமான விசு அறிமுகம் செய்து வைத்தார்.
பூந்தோட்டம் என்ற படத்தில் முதன் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்
தமிழ்நாடு போலீஸ் தொப்பையை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? என விவேக் இவரை வைத்து கிண்டல் செய்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.
விவேக் மற்றும் வடிவேலு படங்களில் துணை காமெடி நடிகராகவும், ஊர் பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரங்கள் என தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு லோகேஷ், ராம்குமார் என்ற மகன்களும், ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர். பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.
சிவநாராயணமூர்த்தியின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 12 மணி மேல் நடைபெறுகிறது.
இவரது மறைவை அறிந்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
