இயக்குனர் கவுதமன், தினமும் 3 மணி நேரம் சண்டைப்பயிற்சி

தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கவுதமன். 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர், 2010 ஆம் ஆண்டு “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக “சந்தனக்காடு” மற்றும் “ஆட்டோ சங்கர்” ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ள
தற்போது கவுதமன் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் “மாவீரா” திரைப்படம் சண்டைக் காட்சிள் நிறைந்தது.
இந்த படத்தில் வரும் 5 சண்டைக் காட்சிகளையும் புகழ் பெற்ற மாஸ்டர் “ஸ்டண்ட்” சில்வா வடிமைக்கிறார். சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாகவும் உக்கிரமாகவும் வரவேண்டும் என்பதற்காக சில்வா மாஸ்டரின் உதவியாளர் சிவா மூலம் கவுதமன் சண்டை பயிற்சி பெற்று வருகிறார். தினமும் 3 மணிநேரம் கவுதமனுக்கு சிவா பயிற்சியளிக்கிறார்.
கவுதமன் சண்டை பயிற்சி பெறும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,
