நாளை இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு: தூத்துக்குடி வந்த வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்காக எழுத்து தேர்வு நாளை (27.11.2022) அறிவித்துள்ளது.
மேற்படி தேர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. இந்த பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாக அறையில் வைக்க ஏற்பாடு செய்தார், மேலும் அந்த அறைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 4 ஆயுதம் ஏந்திய போலீசார் அடங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
.







