பெண் வீசிய செருப்பை இரை என நினைத்து கவ்விச்சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ
ஒரு வீட்டின் முன்பு ஊர்ந்து சென்ற பாம்பை பார்த்து பயந்துபோன பெண் அதை விரட்டுவதற்காக செருப்பை வீசுகிறார். அதை இரைஎன நினைத்து அந்த பாம்பு செருப்பை கவ்வி செல்கிறது.
இதுபற்றி, இந்திய வன துறை அதிகாரியாக உள்ள பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பை விரட்ட பெண் செருப்பை வீசியதும், டக்கென்று பாம்பு அதனை வாயில் கவ்வி கொள்கிறது. இரையென நினைத்து சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்ற பாம்பை உடன் இருந்தவர்கள் விரட்டுகிறார்கள்.
இதனால், செருப்பை கவ்வியபடியே இரை கிடைத்த சந்தோசத்தில் அந்த பாம்பு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து வேகமுடன் புதர் பகுதியை நோக்கி ஊர்ந்து செல்கிறது. இதனை பார்த்து, தனது ஒரு செருப்பை வீசிய பெண் கத்தி கூச்சலிடுகிறார். அருகேயிருக்கும் மற்றொரு பெண் அடக்க முடியாமல் சிரிக்கிறார். பாம்பு இரையுடன் (செருப்புடன்) பக்கத்தில் புதர் மண்டியிருந்த பகுதிக்குள் சென்று மறைகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டு, அதில் இந்த செருப்பை வைத்து பாம்பு என்ன செய்யும் என்று எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. அதற்கு கால்கள் இல்லை. தெரியாத இடம் என்று பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் வெளியான இந்த வீடியோ ஏறக்குறைய 4 லட்சம் முறை பார்வையிடப்பட்டு உள்ளது. 9 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ஒருவர், ரப்பர் செருப்பின் வாசனை அல்லது சுவையை வைத்து அதனை கவ்வி கொண்டு சென்றிருக்க கூடும் என கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
அந்த பாம்பு ஏதோ கட்டுவதற்காக அதனை எடுத்து செல்வது போல் உள்ளது. அது ஒரு கோட்டையாக கூட இருக்கலாம். ஆனால், ரொம்ப மனமகிழ்ச்சியாக அது செல்கிறது. நடனம் ஆடியபடியும், தலையை முன்னும், பின்னும் அசைத்தபடியும் செல்கிறது. கால்கள் இல்லையாதலால் டான்சிங்கிற்கு பதிலாக அது பிரான்சிங் (துள்ளலான நடை) செய்கிறது என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.
எனினும், கால்கள் இல்லாத பாம்பு அந்த ஒற்றை செருப்பை எடுத்து கொண்டு போய் என்ன செய்ய போகிறது? இந்த பெண், தன்னிடம் உள்ள ஒரு செருப்பை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்? என்பது நெட்டிசன்களின் ஆச்சரியம் நிறைந்த கேள்வியாக உள்ளது.
I wonder what this snake will do with that chappal. He got no legs. Unknown location. pic.twitter.com/9oMzgzvUZd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 24, 2022