தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

 தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித சவேரியாரின் விரல் பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்ற திருப்பலி பங்கு தந்தை குழந்தை ராஜன் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கொடிபவனி நடைபெற்றது. பின்னர் ஆலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் மறைவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை பென்சன் தலைமையில் திருகொடியேற்றம் நடைபெற்றது. சவேரியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருள் தந்தையர்கள் , பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள் டிசம்பர் 3ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 30ந்தேதி இரவு புனித சவேரியாரின் சப்பரப்பவனியும், டிசம்பர் 1-ந் தேதி இரவு நற்கருணை பவனியும், 2-ந் தேதி காலை புது நன்மை திருப்பலி, அன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனையும் நடக்கிறது. 3-ந் தேதி ஆடம்பர பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மாதா மற்றும் சவேரியாரின் சப்பரப் பவனியும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்கலும் தினாரி காலை சிறப்பு திருப்பலி, மாலையில் நற்கருணை ஆராதனை நடைபெறும்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன், ஊர் நிர்வாகிகள், அருள் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *