கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்; 3 அமைச்சர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மற்றும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் பேசினார்கள்.

ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .கி. செந்தில்ராஜ்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி,
வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, கோவை வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.கீதாலெட்சுமி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் .பிரம்மசக்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
முன்னதாக கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் அரங்குகளை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.







