கோவில்பட்டி புற்று கோவிலில் அன்னாபிஷேகம்
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், முருகன் சுவாமி அம்பாள், சப்த கன்னி கால பைரவர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாரதணை நடைபெற்றது பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.

கோவில்தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன்,
நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.







