கடம்பூர், கயத்தாறில் கனமழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 494 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.
கோவில்பட்டி கடம்பூர், கயத்தார் பகுதிகளில் நேற்று மழை 2 மணி நேரம் கனமழை பெய்தது. கடம்பூரில் 82 மி.மீ., 78 மி.மீ. மழை பெய்து இருந்தது. கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கடம்பூர் ரெயில்வே சுரங்க பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக சுரங்க பாதையில் போக்குவரத்து முடங்கியது
கோடாங்கல் கிராமத்துக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்,.நிறைய பேர் ஆபத்தான வகையில் சுரங்க பாலத்தின் மேல்பகுதி வழியாக நடந்து சென்று தண்டவாளத்தை கடந்து மறுபுறம் வந்தனர்.
இதை தொடர்ந்து ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.







