• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

மின்சாரம்  கொள்முதலில் ‘மெகா ஊழல்’- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 3 மாதங்களுக்கு முன் அமைந்த த.வெ.க கூட்டணி அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. காரணமே இல்லாமல் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்த சிரமங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய முனைகிறார்களோ என்ற எண்ணம் மக்களிடம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கண்காட்சியில் 155 நாடுகளின் தபால் தலைகள் 

தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம் அனைத்து அஞ்சலங்களிலும் கடந்த 9.10.2026 முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் , பழைமை வாய்ந்த அஞ்சல் தலைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வண்ணம்,  கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 155 நாடுகளின் தபால் தலைகள், பழங்காலத்து அரிய வகை புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் நாளேடுகள், காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி நேற்று திங்கட்கிழமை […]

செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடக்கம்?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் தென் பகுதிகளில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் மற்றும் பருவநிலை ஆர்வலர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார். இதன்படி, வருகிற 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளியிட்ட செய்தியில், வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

செய்திகள்

அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்பு; அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாட பயன்பாட்டுக்கான அரிசியே கிலோ ரூ.77 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரையிலான 3 மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ மூட்டை ரூ.700 வரையிலும் உயர்ந்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி வருவது […]

கோவில்பட்டி

கம்ம நாயுடு சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக டாக்டர் வி கெங்குசாமி நாயுடு பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது..விழாவுக்கு இனாம் மணியாச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக :-இயற்கை விவசாயி பொன்னுஸ் நேச்சுரல் நிறுவனர் பொன்னுசாமி கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது  வழங்கினார்,  விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-‘ ஏ.. மகாலட்சுமி முதல்வர் எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி , கோவில்பட்டி எஸ்..ஸ்ரீதர்  ஏ.வி.மேல்நிலைப்பள்ளி , […]

கோவில்பட்டி

விளாத்திகுளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில்  தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாக குழு உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் மறை பரப்பு ஞாயிறு நிகழ்ச்சி

 கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியை ஆலய பங்குதந்தை அருள்ராஜ் அடிகளார்,உதவி பங்குதந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் ஆலய வளாகத்தில்  மறைபரப்பு ஞாயிறுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஜெபம் செய்து ரிப்பன்வெட்டி தொடங்கி வைத்தார்கள். இங்கு மண்டலங்கள் வாரியாக சிற்றுண்டி கடைகள், விளையாட்டுப் போட்டிகள் ,மற்றும் பல வகையான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தானான் இறைமக்கள் அந்த கடைகளில் பொருட்கள் வாங்கி அதன் மூலம் வசூல் ஆன பணத்தை பங்குத்தந்தையிடம் மண்டல பொறுப்பாளர்கள் வழங்கினார்கள். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே குளவிகள் கொட்டியதில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கோவில்பட்டி அருகே குருமலை தாழையூத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு, முடுக்கலாங்குளம்  கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள்  மழை வேண்டி பூஜை செய்வதற்காக சென்றனர். ஆட்டு கிடா வெட்டி  சாமிக்கு படையல் போட்டு பூஜை முடித்த பிறகு, அனைவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்தனர். அப்போது திடீரென அந்த பகுதியில்  கூட்டமாக வந்த கடந்தை (கதண்டு) குளவிகள் சாப்பிட அமர்ந்தவர்களை  கொட்ட தொடங்கின. இதனால் சாப்பிட அமர்ந்தவர்கள் தலை தெறிக்க அங்கும் இங்கும் ஓடினர்.  இருந்த போதிலும் கடந்தை (கதண்டு) […]

செய்திகள்

டெல்லியில் போராட்டம்: பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கைது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர்  ஞானேஷ்குமார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக கோரியும் காங்கிரசார் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 4-வது நாளாக போராடி வருகின்றன.. இதனிடையே, தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி, டெல்லி  ஜந்தர் மந்தரில் இன்று (அக் 10) போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவிருக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை […]

செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் வீட்டில் ராகுல் காந்திக்கு  மதிய விருந்து

இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக மாணவர்களிடம் பேசி வருகிறார். அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மராட்டிய மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சி நடத்திய ராகுல் […]